இராஜராஜ சோழன்

📗 நம் கைகளில் இன்று “இராஜராஜ சோழன்” இன்றைய பொய்களும் நேற்றைய வரலாறும். தமிழக வரலாறு குறித்த பல தவறான தகவல்கள் பொது வெளியில் உலா வருகின்றன. தமிழ்ச் சமூகம் அதையெல்லாம் நம்பவும் தொடங்குகிறது!

எது உண்மை? எது பொய்? சோழர் கால கல்வெட்டுகள் சொல்லும் உண்மை என்ன? இந்த நூல் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறது.

Author: இரா. மன்னர் மன்னன்
No of Page: 272
Language: Tamil
Book Format: Paperback
Published: 2021
Publisher: பயிற்று பதிப்பகம்

Rs.1,899.00

Out of stock

இராஜராஜன் காலத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டது, தாழ்த்தப்பட்ட மக்கள் ஊர்களிலிருந்து ஒதுக்கப்பட்டு, சேரிகளில் வாழ நிர்பந்திக்கப்பட்டார்கள், அப்போது தீண்டத்தகாதவர்கள் பொதுக்குளத்தில் நீர் எடுக்கக்கூட முடியவில்லை, தமிழகத்தில் தீண்டாமையைக் கொண்டுவந்தவர், தீண்டாமையைக் கடுமையாகக்கடைப்பிடித்தவர் இராஜராஜன்  இப்படி ஒரு தரப்பினர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இது உண்மையா?

அதை அறிந்துகொள்ள எந்தப் பின்னணியில் இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்தன என்பதை நாம் பார்க்க வேண்டும். தஞ்சைப் பெரிய கோவிலில் மொத்தம் 1.5 லட்சம் தமிழ் எழுத்துக்கள் உள்ளன. உலகிலேயே அதிக தமிழ்க் கல்வெட்டு எழுத்துகள் உள்ள இடம் இதுதான். இங்குள்ள சோழர்காலக் கல்வெட்டு எழுத்துக்களின் பெரும்பகுதியை, சராசரி தமிழ் அறிவு உள்ள எந்த ஒரு நபராலும் படித்துவிட முடியும்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “இராஜராஜ சோழன்”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…