OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
‘நீதி என்பது இறை விசுவாசத்துடன் பின்னிப் பிணைந்துள்ள ஒன்றாகவும், ஒருவன் நீதியின் அடிப்படையில்செயல்படுவது உண்மையான பக்தியின் வெளிப்பாடாகவும் இஸ்லாம் கருதுகின்றது’
சமூக நீதி பற்றிய இஸ்லாத்தின்கருத்துக்கள் இறைவன், பிரபஞ்சம், மனித வாழ்வு பற்றிய அதன் கோட்பாட்டின் பின்னணியிலேயே அணுகி ஆராயப்படல் வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய போதனைகள், கருத்துக்கள், கோட்பாடுகள் அனைத்தினதும்அடிப்படையாக விளங்குவது, மேற்குறிப்பிட்ட விடயங்களைத்தழுவி நிற்கும் அதன் உலக நோக்காகும்.
Author: சையித் குதுப்
Translator: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்
No. of pages: 426
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2020
Publisher: சீர்மை
Rs.2,899.00 Original price was: Rs.2,899.00.Rs.2,499.00Current price is: Rs.2,499.00.
1 in stock
இந்த உலக நோக்கின் அடிப்படையிலேயே இஸ்லாத்தின்சட்டங்கள், வணக்கங்கள், சமூக, அரசியல், பொருளாதாரக் கோட்பாடுகள், பண்பாடு, நாகரிகம் அனைத்தும்கட்டி எழுப்பப்பட்டுள்ளன. ஒரு மதம் என்றவகையில் இஸ்லாம்இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர்த்தாவாகிய இறைவனுக்கும் அவனது படைப்பினங்களுக்குமிடையிலுள்ள தொடர்புகள் பற்றியும் மனிதனுக்கும், இப்பிரபஞ்சத்திற்கும் இடையில் உள்ள தொடர்புகள் பற்றியும் பேசுகின்றது.
இப்பிரபஞ்சத்தில் மனிதனின் நிலை, அவனது வாழ்வின் குறிக்கோள், அதனை அடைவதற்கான நெறிமுறைகள் பற்றி மிகத் தெளிவானஒரு கருத்தை இஸ்லாம் கொண்டுள்ளது. இக்கருத்து மனிதவாழ்வின் அனைத்துத் துறைகளையும் பொதிந்துள்ளது.இந்தவகையிலேயே இஸ்லாம் தனிமனிதனுக்கும், சமூகத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றியும், பல்வேறு சமூகங்களுக்கிடையிலான தொடர்புகள் எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது பற்றியும், சமூகப் பண்பின் முக்கியஅங்கங்களான அரசியல், பொருளாதார நிறுவனங்கள் எவ்வகையில் அமைதல் வேண்டும் என்பது பற்றியும் மிகத்தெளிவாக விளக்கியுள்ளது.
No account yet?
Create an Account
Reviews
There are no reviews yet.