கசந்த கோப்பி | Bitter Berry

நம் கைகளில் “2011ம்” ஆண்டு சாஹித்திய விருது பெற்ற Bitter Berry என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகும்

இது ஒரு கோப்பிக் காலத்துக் கதை நாவலின் களம் கண்டி, கம்பளை நாவல்வர், தொளஸ்பாகையில் உள்ள “லந்தானா” கோப்பித் தோட்டம்

இது மலையக மக்களின் வரலாறு அல்ல மாறாக அந்நிய முதலீட்டின் உரிமையாளர்களான ஆங்கிலேயத் துரைமார்கள் பற்றி ஏதாவது அறிந்திருக்கின்றோமா?
நீங்கள் எப்படியோ தெரியவில்லை. சிலவேளை அறிந்தும் இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை இல்லை என்றே சொல்வேன். எதுவிதமான கூச்சமுமின்றி.

Rs.899.00

1 in stock

கோப்பியின் ஆரம்பம் அதன் வளர்ச்சி. காசு காய்க்கின்ற மரமாக அதை நம்பி அதன் காலடியில் விழுந்து கிடந்த வெள்ளைக்காரர்கள். அதன் செழுமை தந்த செல்வச் செழிப்பால் இந்த நாடு கொண்ட வளர்ச்சி, பாதைகள், பாலங்கள், புகையிரதப் பாதைகள். போக்குவரத்து, வங்கித் தொழில், காப்புறுதி, ஏற்றுமதி இறக்குமதிகளுக்கான துறைமுக அபிவிருத்திகள், கோப்பியின் அழிவு.

கோப்பியின் அழிவிலிருந்து அதன் சாம்பல் மேட்டிலிருந்து எழுந்தது தான் தேயிலை என்பார்கள். அந்தக் கோப்பிக் காலம் பற்றி, கோப்பித் தோட்ட உருவாக்கம் பற்றி, கொண்டு வந்த காசை எல்லாம் கோப்பித் தோட்டங்களில் கொட்டிவிட்டு அது பலன்தர ஆரம்பிக்கும்வரை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் அவர்கள் திண்டாடிய நிலைமைகள் பற்றி, பலனளிக்காமல் கோப்பிப் பயிர் செய்கை படுத்துவிட்ட பிறகு திரும்பவும் லண்டன் சென்றுவிட பணமின்றித் தவித்துப் போன துரைமார்கள் பற்றி எல்லாம் அறிந்திருக்கவில்லை.

“கசந்த கோப்பி” என்கின்ற இந்த நாவல் வாசித்து அறியப்படாத அந்தப் பக்கங்களின் பெரும் பகுதிகளை ரத்தமும் சதையுமாக ஒளிவு மறைவின்றி காட்டுகிறது.

Author: இரா.சடகோபன்
No of Pages: 410
Language: தமிழ்
Book Format: Paperback
Published: 2010
Publisher: Sooriya Publishers

Reviews

There are no reviews yet.

Be the first to review “கசந்த கோப்பி | Bitter Berry”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…