OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
சதுரங்கம் ஆடத் தெரிந்தவர்களுக்கு நான் இப்போது சொல்லப்போகிற உதாரணம் புரியும். நான் எதற்காகச் சதுரங்கத்தைச் சொல்லுகிறேனென்றால், அதில்தான் ஒவ்வொரு காய்க்கும் ஒவ்வொரு விதி உண்டு. இரண்டு பேர் உட்கார்ந்து நூறு ஆட்டங்கள் ஆடினாலும் அந்த நூறு ஆட்டங்களும் நூறு விதமாக அமையும். தொடக்கமும் முடிவும் அதிக வித்தியாசமில்லாமல் இருந்தாலும் இடையில் நிகழ்கிற ஆட்டம்தான் மிகவும் சுவாரசியமானது.
ஒவ்வொரு காயும் அதனதன் விதிக்கேற்பத்தான் நகர்த்தப் படுகின்றன. ஆனாலும் ஒவ்வொரு ஆட்டத்தின் போக்கும் ஒன்றிலிருந்து ஒன்று முழுக்க முழுக்க மாறியே இருக்கிறது
No. of pages: 448
Rs.2,499.00
Available on backorder
கருப்பொருள்: பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, மாறிவரும் சமூக மாற்றங்கள்
தமிழ்நாட்டில் பெண்கள் கல்வி கற்று வேலைக்காக வெளிவரத் தொடங்கிய காலகட்டத்தை சித்தரிக்கிறது.
தன்னுடையதல்லாத காரணத்தால் பழிக்கு ஆளான பெண்ணைப் பொதுச்சமூகம் எவ்வளவு துச்சமாக மதிக்கிறது என்பதையும் அந்த உதாசீனத்தை அவள் எப்படித் தனது சுயமரியாதையாலும் சுயச்சார்பாலும் எதிர்கொள்கிறாள் என்பதையும் பரிவுடனும் பெருமிதத்துடனும் இந்த நாவலில் சித்திரிக்கிறார் ஜெயகாந்தன்.
கலைநோக்குடனும் சமூகப் பார்வையுடனும் எழுதப்பட்ட இந்த நாவல் பெண்ணின் உளவியலையும் நேர்த்தியாகப் புலப்படுத்துகிறது. ‘காலத்தின் அலைகளால் எற்றுண்ட’ பெண்ணான கங்கா எல்லாக் காலத்திலும் பெண்ணுக்கு இழைக்கப்படும் அவலத்தின் அடையாளமாக நிற்கிறாள். ஒவ்வொரு காலத்திலும் பெண் நடத்தும் சமரைச் சொல்வதாலேயே இந்த நாவலின் மையமும் பொருளும் காலங்கடந்தும் நிலைபெறுகின்றன. அதுதானே ஒரு கிளாஸிக் படைப்பின் இலக்கணம்! அந்த இலக்கணத்தை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ தெளிவாக முழுமைப்படுத்துகிறது.
No account yet?
Create an Account
Reviews
There are no reviews yet.