24 மணிநேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள் | The 24 Hours Turn Around

பூமி சூரியனைச் சுற்றி வரும் நேரத்திற்குள் ஒரு நேர்மறையான, நிரந்தரமான, பரிபூரணமான மாற்றம் ஏற்பட முடியுமா? ஒரே நாளில் உங்கள் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்ற முடியுமா? அது சாத்தியம் மட்டுமல்ல, நிகழக்கூடியதும்கூட.

இப்புத்தகம் ஓர் எளிய தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் மாபெரும் மாற்றங்கள் படிப்படியாக, நீண்ட காலகட்டங்களில் நிகழ்பவை அல்ல. குறிப்பிட்டக் கணங்களில் நீங்கள் விழிப்புணர்வுடன் மேற்கொள்ளும் தீர்மானங்களின் விளைவுகள்தான் அம்மாற்றங்கள்.

Author: Neil Eskelin & Jim Hartness
Translator: Nagalakshmi Shanmugam
No. of pages: 268
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2011
Publisher: Manjul Publishing House

Rs.2,399.00

3 in stock

மாற்றம் நிகழ வேண்டுமென்றால் மாற வேண்டும் என்ற எண்ணம் உறுதியான தீர்மானத்தை முதலில் எடுக்க வேண்டும். அந்த தீர்மானத்தை எடுக்க ஒரு கணம் கூட ஆகாது ஆனால் அதன் தாக்கம் உங்களுடைய வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும்.

சூழ்நிலைகள் உங்களுடைய இலக்குகளைத் தீர்மானிக்க அனுமதிப்பதும் ஆபத்தானது. சிரமமான சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு விரைவாகப் பொருந்தும் திறனை வளர்த்துக் கொள்வது பெரும் பலன்களைக் கொடுக்கும்.

உங்கள் ஒவ்வொரு கணமும் மதிப்பு மிக்கதுதான். கடிகாரச் சத்தத்தை நீங்கள் ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, நேரம் உங்களுக்கு எதிராகச் செயல்படுவதை மாற்றி அதை உங்களுக்காக வேலை செய்ய வைக்கலாம்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “24 மணிநேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள் | The 24 Hours Turn Around”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…