சூரத்துல் ஃபாத்திஹா

திருக்குர்ஆன் விரிவுரை. சூரா ஃபாத்திஹாவின் முழுமையான மொழிபெயர்ப்பும் குர்ஆனை விரும்புவோருக்கு அதன் உள்ளார்ந்த விள்ளக்கங்களையும் இங்கு கற்றுக் கொள்ள முடியும்

குர்ஆன் இறங்கிய அந்த நேரத்து மக்களின் அறிவுடன் குர்ஆன் அப்போதும் ஒத்துப் போனது. இன்னும் சொல்வதென்றால் குர்ஆன் இறங்கிய காலத்தில் சொல்லப்பட்ட அதே வார்த்தைகள் இந்த 21ஆம் நூற்றாண்டின் செய்தியோடு கொஞ்சமும் பிசிறில்லாமல், மோதல் இல்லாமல், முரண்படாமல் ஒத்துப் போவதைக் காணலாம். இந்த அதிசயம் தான் குர்ஆனின் முஃஜிஸா.

Title: சூரத்துல் ஃபாத்திஹா – திருக்குர்ஆன் விரிவுரை
Subject: மொழிபெயர்ப்பு, விளக்கவுரை , இஸ்லாம்
Author: Muhammad Mutwali ash-Sharawi
Translator: M. Y. Muhammad Ansari Manbayee
No. of pages: 304
Book Format: Hardcover
Published on: 2019
Publisher: Imam Bukhari Trust

Rs.3,499.00

Available on backorder

நவீன கண்டுபிடிப்புகளும் அறிவியல் வெளிப்பாடுகளும் நிறைந்த 21ஆம் நூற்றாண்டிலும் ஒத்துப்போகிறது. வார்த்தைகள் ஒன்றுதான். பொருள்களும் அதுவே. ஆனால் விளக்கம் விரிவடைந்து கொண்டே வருகிறது. இப்படிப்பட்ட அதிசய நிகழ்வை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வெளிப்படுத்த முடியாது என்பது திண்ணம்.

குர்ஆன் மொழியால் அரபு தேசத்தை வரையறையாக கொண்டு அரபு மொழியில் இறங்கியது. ஆனால் அதன் மார்க்கம் (தீன்) உலகளாவியது. அதனால்தான் இந்த குர்ஆன் இறங்கிய அதே காலத்தில் அரபு அல்லாத பிரதேசங்களை பற்றியும் பேசியது. ரோமாபுரிப் பேரரசையும் பாரசீக சாம்ராஜ்யத்தையும் குறிப்பிட்டு பேசியது. இவை இரண்டும் அந்த கால இரு வல்லரசுகள். தற்காலத்தில் அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா போன்று அக்காலத்தில் இவ்விரண்டும் பலம் வாய்ந்த சமநிலையான இருபெரும் பேரரசுகளாக விளங்கின.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சூரத்துல் ஃபாத்திஹா”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…