முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி

குறிப்பாக முஸ்லிம் பெண்களும், பொதுவாக எல்லாப் பெண்களும் அவசியம் இந்நூலைப் படிக்க வேண்டும்.

பெண். வீட்டில் அடக்கமாக இருப்பவள்; பிள்ளைகளை வளர்ப்பவள்; வீட்டை நிர்வகிப்பவள் என்று மட்டும் இல்லாமல் அவள் ஒரு சகாப்தம்; வீரர்களை உருவாக்குபவள்; சிறந்த தலைமுறைக்கு வித்திடுபவள்; அழைப்புப்பணியின் முன்னோடி: வாழ்க்கையைச் செம்மைப்படுத்த பெரும் தகுதி பெற்றவள்; ஆணுக்குத் துணை நிற்பவள் என்று பெண்ணின் பன்முகத் தன்மையை தெளிவுபடுத்துகிறது.

Title: The character of the Muslim woman (Arabic)
Author: அஷ்ஷைக் முஹம்மது அலீ அல் ஹாஷிமீ
Translator: உமர் ஷரீஃப் காஸிமி
Category: மொழிபெயர்ப்பு / பெண்கள்
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2016
Publisher: தாருல் ஹுதா பதிப்பகம்

Rs.2,299.00

1 in stock

இந்நூல் …

இஸ்லாம் உருவாக்க விரும்புகின்ற முஸ்லிம் பெண்மணியின் தனித் தன்மையைத் துல்லியமாக விவரிக்கிறது.

” இழிவு, இயலாமை, பிற்போக்குத்தனம் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றி கண்ணியம் மற்றும் முன்னேற்றத்திற்கு பெண்ணை அழைத்துச் சென்றது இஸ்லாம்தான் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

வேறு எங்கும் அடையாத உயர்வை இஸ்லாமிய வரலாற்றில் மட்டும்தான் பெண் அடைந்திருக்கின்றாள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

மனித அறிவுக்கு ஏற்ப பயிற்சி கொடுக்கப்பட்ட பெண்ணிடம் காணப்படுகின்ற முரண்பாடுகள், ஒழுங்கீனங்கள் அல்லாஹ்வுடைய வேதம் மற்றும் நபிவழிக்கு ஏற்ப பயிற்சி கொடுக்கப்பட்ட பெண்ணிடம் இருக்காது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

இஸ்லாம் கூறுகின்ற ஒழுக்கங்களை கற்று, அவற்றை பின்பற்றுகின்ற பெண்தான் சமூகத்தில் உயர்ந்தவளாகவும் சீர்பெற்றவளாகவும் திகழ்வாள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

இவை அனைத்தையும் சரியான ஆதாரங்களுடன் தெளிவான நடையில் இந்நூலில் விவரிக்கிறார் இதன் ஆசிரியர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…