இஸ்லாமிய புத்தகங்கள்

அர்ரஹீக் அல் மக்தூம் | Ar-Raheeq Al-Makhtum

Rs.2,799.00

وَمَا أَرْسَلْتُكَ إِلَّا رَحْمَةً لِلْعَلَمِينَ .

(நபியே!) உம்மை அகிலத்தாருக்கு ஓர் அருளாகவே அன்றி நாம் அனுப்பவில்லை.(அல்குர்ஆன் 21 : 107)

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஓர் ஆழமான ஊற்றாகும். இதிலேதான் இஸ்லாமிய உலகின் உயிரோட்டமும் முழு மனித சமுதாயத்தின் ஈடேற்றமும் இருக்கிறது என்பதை ஆழமாக அறிந்து கொள்ளலாம்.

இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை துல்லிய ஆதாரங்களுடன் வரலாறுகளை முழுமையாக எடுத்துக்கூறும் நூலாக இது பார்க்கப்படுகிறது.

Author: As-Shaykh Safiyyur Rahmaan Mubaarakpoori
Translator: Mufti Umar Shareef ibnu Adbus Salaam Qasimi
Subject: Biography | வாழ்க்கை வரலாறு
No. of pages: 616
Book Format: Hard Cover
Language: Tamil
Edition: 30th July 2024
Publisher: Darul Huda Publishers

அன்னை கதீஜா (ரழி) அன்ஹா

Rs.799.00

கதீஜா (ரழி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நாம் உயிரோட்டமாக படிக்க சிறந்த புத்தகம்

Author: Sayyid Abdur Rahman Umari
Category: வாழ்க்கை வரலாறு
No. of pages: 112
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2016
Publisher: Sajitha Book Center

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா

Rs.2,199.00

பெண்ணினத்திற்குப் பெருமை சேர்த்த பெருவாழ்வு, வரலாற்று அறிவு, இலக்கியப் புலமை, கவிதை ஈடுபாடு, மருத்துவ அறிவு, உரையாற்றல், சொல்லாற்றல் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழாக, பயனுள்ள ஓர் அறிவுக் களஞ்சியமாக இந்நூல் திகழ்கின்றது.

Author: சையது சுலைமான் நத்வி
Translator: சையத் அப்துர் ரஹ்மான் உமரி
Category: மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு
No. of pages: 432
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2015
Publisher: Sajitha Book Center

இஸ்லாத்தில் சமூக நீதி | Social Justice in Islam (Arabic)

Original price was: Rs.2,899.00.Current price is: Rs.2,499.00.

‘நீதி என்பது இறை விசுவாசத்துடன் பின்னிப் பிணைந்துள்ள ஒன்றாகவும், ஒருவன் நீதியின் அடிப்படையில்செயல்படுவது உண்மையான பக்தியின் வெளிப்பாடாகவும் இஸ்லாம் கருதுகின்றது’

சமூக நீதி பற்றிய இஸ்லாத்தின்கருத்துக்கள் இறைவன், பிரபஞ்சம், மனித வாழ்வு பற்றிய அதன் கோட்பாட்டின் பின்னணியிலேயே அணுகி ஆராயப்படல் வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய போதனைகள், கருத்துக்கள், கோட்பாடுகள் அனைத்தினதும்அடிப்படையாக விளங்குவது, மேற்குறிப்பிட்ட விடயங்களைத்தழுவி நிற்கும் அதன் உலக நோக்காகும்.

Author: சையித் குதுப்
Translator: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்
No. of pages: 426
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2020
Publisher: சீர்மை

இஸ்லாமிய ஷரியத்தில் பெண்களின் நிலை | Women in Islamic Shariah

Rs.1,299.00

ஆண்-பெண் சமத்துவம் எனும் கோஷம், பாலியல் சமத்துவம், பெண் விடுதலை போன்ற காரணங்கள் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா?

Title: Women in Islamic Shariah
Author: Maulana Wahiduddin Khan
Translator: H. Abdus Samath
Category: கட்டுரை, மொழிபெயர்ப்பு
No. of pages: 176
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2022
Publisher: Sajitha Book Center

இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்

Original price was: Rs.2,969.00.Current price is: Rs.2,569.00.

அண்ணல் நபிகள் (ஸல்) அவர்களின் அருமைத் தோழர்கள் ஷாம் பிரதேசத்தை வெற்றி கொண்ட வீர வரலாறை எடுத்தியம்பும் அரபி நூல் “ஃபத்ஹுஷ் ஷாம்”.

பிரபல இஸ்லாமிய வரலாற்றாசிரியர் அல் இமாம் அல் வாகிதீ இந்த வரலாறை அரபியில் எழுதியுள்ளார். அதனை ஆங்கிலத்தில் மௌலானா சுலைமான் அல் கிந்தி மொழிபெயர்த்துள்ளார். உங்கள் கரங்களில் தவழ்வது ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட நூலே

Author: இமாம் அல்-வாகிதீ
Translator: எம். எஸ். அப்துல் ஹமீது
No of Pages: 651
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2019
Publisher: இலக்கியச்சோலை

சூரத்துல் ஃபாத்திஹா

Rs.3,499.00

திருக்குர்ஆன் விரிவுரை. சூரா ஃபாத்திஹாவின் முழுமையான மொழிபெயர்ப்பும் குர்ஆனை விரும்புவோருக்கு அதன் உள்ளார்ந்த விள்ளக்கங்களையும் இங்கு கற்றுக் கொள்ள முடியும்

குர்ஆன் இறங்கிய அந்த நேரத்து மக்களின் அறிவுடன் குர்ஆன் அப்போதும் ஒத்துப் போனது. இன்னும் சொல்வதென்றால் குர்ஆன் இறங்கிய காலத்தில் சொல்லப்பட்ட அதே வார்த்தைகள் இந்த 21ஆம் நூற்றாண்டின் செய்தியோடு கொஞ்சமும் பிசிறில்லாமல், மோதல் இல்லாமல், முரண்படாமல் ஒத்துப் போவதைக் காணலாம். இந்த அதிசயம் தான் குர்ஆனின் முஃஜிஸா.

Title: சூரத்துல் ஃபாத்திஹா – திருக்குர்ஆன் விரிவுரை
Subject: மொழிபெயர்ப்பு, விளக்கவுரை , இஸ்லாம்
Author: Muhammad Mutwali ash-Sharawi
Translator: M. Y. Muhammad Ansari Manbayee
No. of pages: 304
Book Format: Hardcover
Published on: 2019
Publisher: Imam Bukhari Trust

நபித் தோழர்கள் வாழ்வியல் நிகழ்வுகள் (இரண்டு பாகங்கள்)

Rs.3,499.00

நபித்தோழர்களுக்கென ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தி லும் உயர்ந்ததொரு சிறப்பிடம் இருக்கவே செய்கிறது. அவர்களை நேசிக்காதவரை அவர்களோடு மனப்பொருத்தம் கொள்ளாத வரை எந்தவொரு முஸ்லிமின் இறைநம்பிக்கையும் முழுமையடையாது.

Author: அப்துஸ் ஸலாம் நத்வி
Translator: சையத் அப்துர் ரஹ்மான் உமரி
Subject: மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு
No. of pages: Part I – 426 | Part II – 500
Language: Tamil
Published on: 2022
Book Format: Hardcover
Publisher: தாருல் ஈமான் பதிப்பகம்

நம்பிக்கையாளர்களின் அன்னையர்

Original price was: Rs.2,199.00.Current price is: Rs.1,799.00.

இஸ்லாம் பெண்ணினத்திற்கு பெருமதிப்பு அளிக்கின்றது. எவ்விடத்தில் வைக்க வேண்டுமோ அவ்விடத்தில் வைத்து சிறப்பு செய்திருக்கின்றது. இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரின் சிறப்புகள் உண்மையில் இறைத்தூதரின் சிறப்பு களின் ஒரு பகுதியாகவே திகழுகின்றன. சீறத்துந் நபி எனப்படும் இறைத்தூதரின் வரலாற்றின் ஓர் அங்கமாகவும் அவை இடம் பெறுகின்றன.

Author: சையத் அப்துர் ரஹ்மான் உமரி
No. of pages: 440
Book Format: Hard Cover
Language: தமிழ்
Published on: 2018
Publisher: சாஜிதா புக் சென்டர்

புனித நபியின் பொன்மொழிகள்

Rs.3,599.00

மிஷ்காத்துல் மஸாபீஹ் எனும் இந்த நூல் அரபியில் தொகுக்கப்பட்ட சிறந்த ஹதீஸ் நூல் ஆகும் இந்நூலில் 1051 நபிமொழிகள் இடம்பெறுகின்றன

இந்நூலில் இறைநம்பிக்கை, கல்வி, தூய்மை, தொழுகை  ஆகிய நான்கு அத்தியாயங்களில் உள்ள ஹதீஸ்களின் அரபு மூலமும், அவற்றின் தமிழாக்கமும் உள்ளன. ஹதீஸ்களின் பொருளை வாசகர்கள் ஐயமற அறிந்துகொள்ளும் நோக்கில் கருத்துரை, அருஞ்சொற்பொருள், அறிஞர்களின் தர ஆய்வு ஆகியவற்றை அடிக்குறிப்புகளாகப் பதிவு செய்துள்ளோம்.

Title: புனித நபியின் பொன்மொழிகள் (மிஷ்காத்துல் மஸாபீஹ்)
Author: இமாம் முஹம்மது பின் அப்தில்லாஹ் அல்கதீப் அத்திப்ரீஸீ ( அரபு மூலம்)
Translator: மெளலவி அல் ஹாபிழ் பஸ்லுர் ரஹ்மான் உமரீ
Category: மொழிபெயர்ப்பு, ஹதீஸ்,  இஸ்லாம்
No. of pages: 840
Published on: 2023
Book Format: Hardcover
Publisher: ரஹ்மத் பதிப்பகம்

மஹ்ஜபீன்

Rs.1,199.00

மஹ்ஜபீன் என்ற இந்த நவீனம் வரலாற்று நிகழ்ச்சிகளை மாத்திரமின்றி வரலாற்றுப் பின்னணியையும் உலகுக்கு நல்ல முறையில் சொல்லிக் காட்டுகிறது.

Author: ஹஸன்
Category: நாவல்
No. of pages: 160
Language: Tamil
Book Format: Paperback
Publisher: புது யுகம்

முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி

Rs.2,299.00

குறிப்பாக முஸ்லிம் பெண்களும், பொதுவாக எல்லாப் பெண்களும் அவசியம் இந்நூலைப் படிக்க வேண்டும்.

பெண். வீட்டில் அடக்கமாக இருப்பவள்; பிள்ளைகளை வளர்ப்பவள்; வீட்டை நிர்வகிப்பவள் என்று மட்டும் இல்லாமல் அவள் ஒரு சகாப்தம்; வீரர்களை உருவாக்குபவள்; சிறந்த தலைமுறைக்கு வித்திடுபவள்; அழைப்புப்பணியின் முன்னோடி: வாழ்க்கையைச் செம்மைப்படுத்த பெரும் தகுதி பெற்றவள்; ஆணுக்குத் துணை நிற்பவள் என்று பெண்ணின் பன்முகத் தன்மையை தெளிவுபடுத்துகிறது.

Title: The character of the Muslim woman (Arabic)
Author: அஷ்ஷைக் முஹம்மது அலீ அல் ஹாஷிமீ
Translator: உமர் ஷரீஃப் காஸிமி
Category: மொழிபெயர்ப்பு / பெண்கள்
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2016
Publisher: தாருல் ஹுதா பதிப்பகம்